ஐக்கியதேசியக் கட்சி புறக்கணித்த தேநீர் விருந்துபசாரத்தில் TNA பங்கேற்பு – சம்பந்தனின் இராஜதந்திர அனுகுமுறை

357

வரவு, செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற தேநீர் விருந்துபசாரத்தில் முக்கிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, 2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தார். வரவு- செலவுத் திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் வழமையாக தேநீர் விருந்துபசாரமொன்றை ஜனாதிபதி வழங்குவது வழமையாகும்.
இந்த தேநீர் விருந்துபசாரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த கட்சிகள் ஜனாதிபதியின் விருந்துபசாரத்தை புறக்கணித்துள்ளனர்.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வழங்கும் விருந்துபசாரத்தில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

tna2410214_4   tna2410214_5

 

SHARE