ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கவுள்ளார்.

402
ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் கட்சியின் தேசிய தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு நெருங்கிய தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன.

பிரதி தலைவர் பதவி வழங்கப்படுமானால் அது சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படும் மூன்றாவது சந்தர்ப்பமாக இருக்கும்.

பல கட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்து பழையவற்றை மறந்து ஐக்கிய தேசியக் கட்சியை பலப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் எதிர்வரும் செயற்குழு கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸவை பிரதித்தலைவராக நியமிக்கவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, விஜயதாஸ ராஜபக்ச, ரவி கருணாநாயக்க ஆகியோரின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலேயே ரணில் விக்கிரமசிங்க இந்த முடிவை எடுத்துள்ளார்.

ஏற்கனவே ஜே.ஆர். ஜெயவர்த்தன ஆட்சிக்காலத்தில், ஈ எல் சேனாநாயக்க, எல் பி ஹுருல்லே மற்றும் மொண்டேகு ஜயவிக்கிரம ஆகியோரின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே ஜெயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸவை பிரதித்தலைவராக நியமித்தார்.

இந்த முடிவுக்கு ரணில் விக்கிரமசிங்கவின் தந்தையான எஸ்மொன்ட் விக்கிரமசிங்கவே காரணமாக இருந்தார். அவரால் ஏற்படுத்தப்பட்ட ஜே ஆர்- பிரேமதாஸ இணைப்பே ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வந்தது.

இதன்போது 1977ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியை பெறுவதற்கு காரணமாக இருந்தது என்று ரணில் விக்கிரமசிங்க நம்புகிறார்.

இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின்; ஜனாதிபதி வேட்பாளர் நிலைக்கு ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாஸ ஆதரவளிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

SHARE