ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் தலையீடு செய்வதனால் இலங்கை சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது

394

ஐ.நாவின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் அதிருப்தி:-

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் புகலிட விண்ணம் செய்திருந்த போதிலும் பாகிஸ்தானிய புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த தீர்மானித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாகத் தெரிவித்துள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை வேறும் நாடுகளில் பாதுகாப்பாக குடியமர்த்த கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் இலங்கைக் கிளை கோரியிருந்தது.

எனினும், புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ள போதிலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வெளிவிவகார அமை;சு சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மைக்காலமாக புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையில் பாரியளவில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

புகலிடக் கோரிக்கையாளர்களை பராமரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரத்தில் தலையீடு செய்வதனால் இலங்கை சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது

SHARE