ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

110

 

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

mahinda-medamulan-380-seithy

பல ஆண்டுகளாக இலங்கையில் ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான கூட்டணி கலைக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி கூட்டமைப்பு கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியும் கூட்டமைப்பின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இந்த தீர்மானத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதான கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறிக் கொள்ளும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சுதந்திரக் கட்சி வெளியேறினால் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய சிறு கட்சிகள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்படும் என குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 24ம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இது குறித்த தீர்மானத்தை எடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்வார்கள் என கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

SHARE