ஐந்­தரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை முன்­னி­று த்தி ஐ.தே.க.வும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பிர­சாரம் செய்யத் தொடங்­கி­யுள்­ளன.

531

lt.col eelapiriyan 2வரும் ஜன­வரி மாதம் ஜனா­தி­பதித் தேர்தல் நடத்­தப்­படும் என்ற பர­வ­லான ஊகங்­க­ளுக்கு இடையே, நாட்டின் இரண்டு பிர­தான அர­சியல் கட்­சி­களும் தமக்­கி­டை­யி­லான பலப்­ப­ரீட்­சையை ஆரம்­பித்­துள்­ளன.
இந்தப் பலப்­ப­ரீட்­சையில், மீண்டும் விடுதலைப் புலிகள் விவ­காரம்தான் முதன்மை பெற்­றுள்­ளது.

விடு­தலைப் புலி­க­ளுடன் கொண்­டி­ருந்த தொடர்பைக் காரணம் காட்டி, மறு­ த­ரப்பை துரோ­கி­யாகக் காட்­டு­வதும், விடுதலைப் புலி­களை அழித்து அல்­லது அழிக்க முயன்­றது என்று கூறி தம்மைப் பெருமைப்­படுத்திக் கொள்­வதும் தான் பிர­தான அர­சி யல் கட்­சிகள் இரண்டின் தலை­வர்­களின் வேலை­யாக மாறி­யுள்­ளது.

ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி சார்பில் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச மூன்­றா­வது தட­வையும், போட்­டி­யி­டுவார் என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதற்கு அவர் பல்­வேறு சட்­டச்­சிக்­கல்­க ­ளையும் தாண்ட வேண்­டிய நிலை வந்­தாலும் அதற்கு அச்­ச­மின்றி அடுத்த முறையும் போட்­டி­யி­டு­வ­தற்குத் தயா­ராகி வரு­கிறார்.

மறு­பக்­கத்தில், பொது­வேட்­பாளர் என்ற நிலை மாறி ஐ.தே.க. தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவே பெரும்­பாலும் போட்­டி­யி­டுவார் என்ற நிலை உரு­வாகி விட்­டது.

சஜித் பிரே­ம­தாச போன்ற, ரணி­லுக்குத் தலை­வலி கொடுத்து வந்த ஐ.தே.க.வின் அடுத்த மட்டத் தலை­வர்­களே ரணிலை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்தத் தொடங்கி விட்­டனர்.

கிட்­டத்­தட்ட ரணில் இப்­போது பலிக்­கடா போன்ற நிலையில் இருக்­கிறார்.

அவ­ரது தலை­மையில் ஐ.தே.க. பெரு­ம­ளவு தோல்­வி­களைக் கண்­டி­ருக்­கி­றது.

இம்­மு­றையும் தோல்­வி­யுற்றால், ரணில் ஐ.தே.க.விலி­ருந்து ஓரங்­கட்­டப்­படப் போவது உறுதி.

அத­னால்தான், சஜித் பிரே­ம­தாச போன்ற அடுத்த நிலை­ போட்டித் தலை­வர்கள் ரணிலை முன்­னி­லைப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்­த­முறை ஜனா­தி­பதித் தேர்­தலில், சிறு­ பான்­மை­யி­னரின் வாக்­குகள்தான் தீர்க்­க­மான முடிவைத் தரு­மென்று பர­வ­லான கருத்து, ஆய்­வா­ளர்­க­ளி­டையே உள்­ளது.

குறிப்­பாக தமிழ், முஸ்­லிம்­களின் வாக்­கு­கள்தான் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக விளங்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­த­நி­லையில், ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவும் கடு­மை­யான சவால்­களை எதிர் ­கொண்டு வரு­கின்­றனர்.

ஒரு பக்­கத்தில் சிங்­கள பௌத்த கடும் ­போக்­கு­வாத ஜாதிக ஹெல உறு­மய போன்ற கட்­சிகள் அர­சாங்­கத்­துக்கு கடும் அழுத்தம் கொடுத்து வரு­கின்­றன.

சிங்­கள பௌத்த கடும்­போக்­கு­வாத கட்­சி­ களின் அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிந்தால், அது சிறு­பான்­மை­யின மக்­க­ளி­ட­மி­ருந்து தம்மை மேலும் அந்­நி­யப்­ப­டுத்தி விடு­மென்று ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச நினைக்­கிறார்.

இந்­த­ள­வுக்கும், மலை­யகத் தமிழ் மக்­க­ளிடம் செல்­வாக்குப் பெற்­றுள்ள இ.தொ.கா. போன்ற அர­சாங்­கத்­துடன் உள்ள பெரும்­பா­லான கட்­சிகள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவுக்கே ஆத­ரவு தெரிவித்­துள்­ளன.

அது­போல, முஸ்­லிம்கள் மத்­தியில் செல்­வாக்குப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், உள்­ளிட்ட பெரும்­பா­லான கட்­ சி­களும் அர­சாங்கத் தரப்­பி­லேயே நிற்­கின்­றன.

இவை இன்­னமும் ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்­பாக தீர்­மானம் எடுக்­கா­வி­டினும், ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவைச் சார்ந்தே நிற்­ப­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன என்­பதை முஸ்லிம் தலை­மை­களின் கருத்­துகள் புலப்­ப­டுத்­து­கின்­றன.

இருந்­தாலும், சிறு­பான்­மை­யின மக்­களின் ஆத­ரவைத் தம்மால் பெற­மு­டி­யாது என்ற உறுத்தல் அர­சாங்­கத்­துக்கு இருந்து கொண்­டே­யி­ருக்­கி­றது.

இதனால் கடும்­போக்கு சிங்­கள பௌத்­த­ வாதக் கட்­சி­க­ளுடன் சம­ரசம் செய்து கொள்­ளவும் முடி­யாமல், அதே­வேளை, குறிப்­பிட்ட சில தமிழ், முஸ்லிம் கட்­சி­களின் ஆத­ரவை நம்பி கடும்­போக்கு பௌத்த கட்சி­களை இழக்­கவும் விரும்­பாத ஓர் இக்­கட்­டான நிலை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இந்­த­நி­லையில், கொள்கை ரீதி­யா­கவோ, அல்­லது திட்­டங்­களை முன்­வைத்தோ வரப்­போகும் ஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற முடி­யாது என்­பதை இரண்டு பிர­தான கட்­சி­களின் வேட்­பா­ளர்­களும் உணர்ந்­தி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

இந்த அர­சியல் வங்­கு­ரோத்து நிலை தான், 2009ஆம் ஆண்டு மே மாதம் முள்­ளி­ வாய்க்­காலில் வைத்து அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை மீண்டும் துணைக்குத் தேட வேண்­டிய நிலையை இரு கட்­சி­க­ளுக்கும் உரு­வாக்கி விட்­டுள்­ளது.

ஐந்­தரை ஆண்­டு­க­ளுக்கு முன்னர் அழிக்­கப்­பட்ட விடு­தலைப் புலி­களை முன்­னி­று த்தி ஐ.தே.க.வும், ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியும் பிர­சாரம் செய்யத் தொடங்­கி­யுள்­ளன.

தேர்தல் காலங்­களில்தான் பல உண்­மை­களும், இர­க­சி­யங்­களும் வெளி­வ­ரு­வ­துண்டு.

விடு­தலைப் புலிகள் பல­மாக இருந்த கால­கட்­டங்­களில், தேர்­தல்­களில் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்­துள்­ளனர்.

தேர்­தல்­களில் அவர்கள் போட்­டி­யிடாத போதிலும், அவர்­களின் கண்ணசை­வுக்காகப் பிர­தான கட்­சிகள் காத்­தி­ருந்­தது வரலாறு.

இப்­போது, விடு­தலைப் புலி­க­ளு­ட­னான கடந்­த­காலத் தொடர்­பு­களைக் கிண்டிக் கிள­றியும், புலம்­பெயர் தமி­ழர்­க­ளுடன் கொண்­டுள்ள உற­வு­களைச் சுட்­டிக்­காட்­டியும், சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்­களைக் கவர இரு கட்­சி­க­ளுமே முயற்­சிக்­கின்­றன.

அதா­வது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், மஹிந்த ராஜபக்சவும் ஒரு­வரை ஒருவர் புலி­யாகக் காட்டிக் கொள்ள முனைந்­துள்­ளனர்.

விடு­தலைப் புலிகள் இயக்கம் மீது ஐரோப்­பிய ஒன்­றியம் விதித்­தி­ருந்த தடையை, ஐரோப்­பிய நீதி­மன்றம் அண்­மையில் நீக்­கி­யி­ருந்­தது.

இதை­ய­டுத்தே, புலிகள் விவ­காரம் சூடு­பி­டித்­துள்­ளது.

இந்த தடை­நீக்­கத்­துக்கும் ரணி­லுக்கும் தொடர்­புள்­ளது என்றும், அவ­ரது லண்டன் பய­ணத்­துக்குப் பின்­னரே இது இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அர­சாங்கம் பிர­சாரம் செய்­தது.

ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்சவே பகி­ரங்க மேடை­களில் இந்தக் குற்­றச்­சாட்டை சுமத்­தினார்.

சுவ­ரொட்­டிகள் மூலம், ரணில் மீது சேறு பூசும் முயற்­சிகள் நடந்­தன.

ஆனால், புலிகள் மீதான தடையை நீடிப்­ப­தற்கு அர­சாங்கம் எதையும் செய்­ய­வில்லை என்று ரணில் குற்­றம்­சாட்­டு­கிறார்.

இதற்­கி­டையே, மலே­சி­யாவில் புலிகளை சந்­தித்துப் பேசி­ய­தாக அடுத்த குற்­றச்­சாட்டை அர­சாங்கம் முன்­வைத்­தது.

அதனை நிரா­க­ரித்­துள்ள ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ச, நியூ­யோர்க்கில் தாம் சந்­தித்த புலம்­பெயர் தமி­ழர்கள் யார் என்­பதை வெளிப்­ப­டுத்த வேண்டும் என்று கோரி­யுள்ளார்.

அப்­படி யாரையும் ஜனா­தி­பதி சந்­திக்­க­வில்லை என்று பாரா­ளு­மன்­றத்தில் அமைச்சர் பீரீஸ் தெரி­வித்­துள்ளார்

ஆக, இரண்டு தரப்­பு­க­ளுமே, இப்­போதும், மறு­த­ரப்பு விடு­தலைப் புலிகள் அல்­லது அதன் ஆத­ரவு சக்­தி­க­ளுடன் தொடர்­பு­களை வைத்­துள்­ள­தாக காட்டிக் கொள்­வ­தற்கு முனை­கின்­றன.

ஒரு கால­கட்­டத்தில் இரண்டு கட்­சி­க­ளுமே தமக்கு சார்­பாக நடந்து கொள்­வ­தற்­காக, விடு­தலைப் புலி­க­ளிடம் நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ பேச்­சுக்­களை நடத்­தி­யி­ருந்­தன – பேரம் பேசி­யி­ருந்­தன என்­பது உண்மை.

1988ம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வேட்­பா­ள­ராகப் போட்­டி­யிட்ட தனது தாயார், சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­க­வுக்கு புலி­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்­காக, அனுரா பண்­டா­ர­நா­யக்க மண­லாறுக் காட்­டுக்குச் சென்று பேச்சு நடத்­தி­யி­ருந்தார்.

அங்கு அவர் பாறை­யொன்றில் வழுக்கி விழுந்­ததால், அந்த இடம் “அனுரா கல்” என்று புலி­களால் அந்தக் கால­கட்­டத்தில் அழைக்­கப்­பட்­டது.

2005ம் ஆண்டு, ஜனா­தி­பதி தேர்­தலின் போது, வடக்கில் தேர்­தலைப் புறக்­க­ணிக்க விடு­தலைப் புலிகள் மறை­மு­க­மாக முடி­வெ­டுத்­தனர்.

அப்­போது, விடு­தலைப் புலி­க­ளுக்கு கோடிக்­க­ணக்­கான பணம் கொடுக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுகள் எழுந்­தி­ருந்­தன.

அது­போ­லவே, புலி­களின் முடிவை மீள்­ப­ரி­சீ­லனை செய்­யு­மாறு ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட, பெ.சந்­தி­ர­சே­கரன் போன்ற மலை­யகத் தமிழ்த் தலை­வர்­களைப் புலி­க­ளிடம் தூது அனுப்­பி­யி­ருந்தார்.

இப்­போது மறு­த­ரப்­புக்குப் புலிவால் கட்ட முனையும் ரணிலும், மஹிந்­தவும் தமது கட்­சிகள் கடந்த காலத்தில் புலி­களின் ஆத­ர­வுக்­கா­கவோ அவர்­களின் கண்­ண­சை­வுக்­கா­கவோ ஏங்கி நின்ற வர­லாற்றை மறந்து விட்­ட­தா­கவே தோன்­று­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை புலி­களின் ஆத­ர­வா­ள­ராகக் காட்­டியும், புலி­களை தாமே அழித்­தது என்று தம்­பட்டம் அடிக்கும் அர­சாங்­கத்தின் வாயை அடைப்­ப­தற்­காக சஜித் பிரே­ம­தாச, நீண்­ட­கா­ல­மாக உறங்­கி­யி­ருந்த ஓர் உண்­மையை உடைத்­தி­ருக்­கிறார்.

ஆர்.பிரே­ம­தாச ஆட்­சி­யி­லி­ருந்த போதே, விடு­தலைப் புலி­களின் தலைவர் பிர­பாக­ரனைக் கொல்­வ­தற்கு முயற்சி எடுக்­கப்பட்­ட­தா­கவும், அதற்­காகப் புலி­களின் பிரதித் தலை­வ­ராக இருந்த மாத்­த­யா­வுக்கு ஆயு­தங்­களும் பணமும் ஐ.தே.க. அர­சாங்­கத்­தினால் கொடுக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் அண்­மையில் ஒரு கூட்­டத்தில் கூறி­யி­ருக்­கிறார்.

புலி­க­ளுக்கு ஆயு­தங்­களைக் கொடுத்து அவர்­களைப் பலப்­ப­டுத்­தி­யது ஐ.தே.க. அர­சாங்­கமே என்ற குற்­றச்­சாட்டு பல காலமாக இருந்து வந்த நிலையில்தான், பிர­பாக­ரனைக் கொல்­வ­தற்கு அர­சாங்கம் வகுத்­தி­ருந்த சூழ்ச்சி வெளிப்­பட்­டுள்­ளது.

ஆனால் அந்தத் திட்டம் தோல்­வியில் முடிந்­த­தா­கவும், சஜித் பிரே­ம­தாச கூறி­யி­ருக்­கிறார்.

ஏற்­க­னவே, புலி­களை வென்­றது தாமே என்று அர­சாங்கம் கொண்­டா­டிய போது, கரு­ணாவைக் கொண்டு புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்­ப­டுத்தி, அவர்­களைப் பல­வீ­னப்­ப­டுத்­தி­யது தாமே என்று ஐ.தே.க. தலை­வர்கள், பகி­ரங்­க­மா­கவே கூறி­யி­ருந்­தனர்.

ஐ.தே.க. புலி­களைப் பல­வீ­னப்­ப­டுத்த முயன்­ற­தா­கவும், பிர­பா­க­ரனைக் கொல்ல முயன்­ற­தா­கவும், அதன் தலை­வர்கள் ஒப்­புக்­கொண்ட இரண்டு காலப்­ப­கு­தி­களுமே, புலி­க­ளுடன் அவர்கள் பேச்சு நடத்­திய காலப்­ப­கு­தி­க­ளாகும்.

ஒரு பக்­கத்தில், புலி­க­ளுடன் பேசிக் கொண்டே அவர்­களை அழிக்கத் திட்­ட­மிட்டோம் என்று ஐ.தே.க. இப்­போது வெளிப்­ப­டை­யா­கவே ஒப்புக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கிறது.

அதாவது, சமாதான முயற்சிகளில் ஐ.தே.க. அரசாங்கம் நேர்மையாக இருந்திருக்கவில்லை என்பதை இது காட்டுகிறது.

ஆனால், அந்தக்கால கட்டங்களில் தாம் சமாதான முயற்சிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டதாகவும் ஐ.தே.க. காட்டிக் கொண்டது.

இப்போது தேர்தலில், சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக, புலிகளை அழிக்கத் தாம் மேற்கொண்ட சூழ்ச்சிகளையும் கூச்சமில்லாமல் ஒப்புக்கொள்ள முன்வந்திருக்கிறது.

வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், இதுபோன்ற இன்னும் பல இரகசியங்களும், உண்மைகளும் சந்திக்கு வரக்கூடும்.

ஏனென்றால், மீண்டும் புலிகளை வைத் துத்தான் தமது அரசியல் வியாபாரத்தை நடத்த பிரதான கட்சிகள் முடிவு செய்து விட்டன.

எனவே, இதுபோன்ற உணர்வுபூர்வமான விவகாரங்களை கிளப்பிவிட்டு, சிங்கள பௌத்த வாக்காளர்களின் ஆதரவை இழுக்கவே இருகட்சிகளும் முயற்சிக்கும்.

இது, கடந்த காலங்களில், சமாதான முயற்சிகளில் விடுதலைப் புலிகளின் நேர்மையின் மீது சந்தேகம் கொண்டிருந்தவர்கள், தமது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்ய வைக்கும் என்பதை இரு கட்சிகளுமே மறந்து விட்டன.

(என்.கண்ணன்)

– See more at: http://www.newstamilwin.com/show-RUmszBTWKXip6.html#sthash.8NdqN0qu.dpuf

SHARE