ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் கொடுப்பனவு தொகை இன்னமும் அதிகரிக்கப்படவில்லை – ஆசிரியர் சங்கம்

330
ஐந்தாமாண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை இதுவரையில் அதிகரிக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கொடுப்பனவு அதிகரிப்பு தொடர்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் மாதாந்த கொடுப்பனவு 500 ரூபா முதல் 1500 ரூபாவாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் கொடுப்பனவு அதிகரிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு 500 ரூபா கொடுப்பனவு வழங்கவே போதுமானதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கல்வி அமைச்சு எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

SHARE