ஐபிஎல் கிரிக்கெட்: ரன் குவிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வெளிநாட்டு வீரர்கள்

672

 

2008–ம் ஆண்டில் உதயமாகி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திருவிழா, இந்திய இளம் வீரர்களின் திறமையை வெளிக்கொணரும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது.இதற்காக தான் ஐ.பி.எல். போட்டிக்கான ஒரு அணியில் அதிகபட்சமாக வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் மட்டுமே களம் இறங்க அனுமதிக்கப்படும் என்ற விதியும் வகுக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளின் வரலாற்றை புரட்டி பார்த்தால் ரன் குவிப்பில் வெளிநாட்டு வீரர்களே அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்து இருக்கிறார்கள் என்ற வேதனையான உண்மை வெளிப்படுகிறது.

வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப உடனடியாக மாற தடுமாறும் இந்திய வீரர்கள், உள்ளூரில் நடைபெறும் போட்டியிலும் பேட்டிங்கில் சொதப்பலை தான் சந்தித்து வருகிறார்கள்.

ஐ.பி.எல். போட்டியில் ஒவ்வொரு சீசனிலும் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு கவுரவமிக்க ஆரஞ்சு தொப்பியுடன், தொடர்நாயகன் விருதுடன் கூடிய ரூ.10 லட்சம் ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவதில் நம்மவர்களை விட வெளிநாட்டு வீரர்களே முன்னணியில் உள்ளனர்.

2008–ம் ஆண்டில் நடந்த முதலாவது ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையை ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஷ் (பஞ்சாப் அணி, 11 ஆட்டங்களில் 616 ரன்கள்) பெற்றார். 2009–ம் ஆண்டில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ ஹைடன் (சென்னை அணி, 12 ஆட்டங்களில் 572 ரன்கள்) அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார்.

2010–ம் ஆண்டில் நடந்த போட்டியில் மட்டும் தான் ஆரஞ்சு தொப்பி இந்திய வீரர் ஒருவர் வசமானது. மும்பை அணிக்காக விளையாடிய நட்சத்திர நாயகன் சச்சின் தெண்டுல்கர் 15 ஆட்டங்களில் 618 ரன்கள் குவித்து அந்த கவுரவத்தை சொந்தமாக்கினார்.

2011, 2012–ம் ஆண்டுகளில் பெங்களூர் அணிக்காக விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி ஆட்டக்கா
ரர் கிறிஸ் கெய்ல் முறையே 608, 733 ரன்கள் குவித்து முதலிடத்தை பிடித்தார். 2013–ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக் ஹஸ்ஸி (சென்னை அணி, 17 ஆட்டங்களில் 733 ரன்கள்) ரன் குவிப்பில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.இந்த ஆண்டுக்கான போட்டியில் இதுவரை 41 லீக் ஆட்டங்கள் முடிந்து இருக்கின்றன. பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் இதுவரை 517 ரன்கள் (10 ஆட்டங்களில்) குவித்து முதலிடத்தில் நீடிக்கிறார்.

அதற்கு அடுத்த இடத்தில் சென்னை அணிக்காக ஆடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வெய்ன் சுமித் (10 ஆட்டங்களில் 440 ரன்கள்) இருக்கிறார். அதிக தொகைக்கு விலைபோன இந்திய வீரர்களை விட குறைந்த தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள் இங்குள்ள சூழலை சமாளித்து பேட்டிங்கில் வெளுத்து வாங்குவது ஆச்சரியம் அளிப்பதாக இருக்கிறது.

அவர்களின் அடியொற்றி இந்திய வீரர்களும் ரன்கள் குவிக்க வேண்டும் என்பதே நமது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். இந்த சீசனில் ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இந்திய பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார் (ஐதராபாத் அணி, 10 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள்), மொகித் ஷர்மா (சென்னை அணி, 10 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள்) ஆகியோர் முதலிடத்தில்

 

SHARE