ஐபோனுக்கு போட்டியாக களமிறங்கும் புதிய Smartphone! இதுதான் விலையா? சிறப்பம்சங்கள்

82

 

உலகளவில் நத்திங் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

ஐபோனுக்கு போட்டியாக இந்த போன் களமிறங்குகிறது. அதன்படி லண்டனை தளமாகக் கொண்ட நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் ஜூலை 12 ஆம் திகதி போனை அறிமுகப்படுத்துகிறது.

நத்திங் போன் (1) ஆனது ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 போன்ற உள்கட்டமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான தகவல்களின் படி, நத்திங் போன் (1) பிரத்யேக வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் என இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும்.

அதேபோல் ஒற்றை எல்இடி பிளாஷ் உடன் முதன்மையான தோற்றத்தில் இந்த சாதனம் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் ஐபோன் 12 மற்றும் ஐபோன் 13 போன்ற பிளாட் பேனல் டிஸ்ப்ளே இந்த சாதனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

நத்திங் போன் (1) ஆனது 45 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவோடு வெளியாகும் என சமீபத்திய கசிவுகள் தெரிவித்தன. அதேபோல் இந்த சாதனம் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்பதை பிராண்ட் முன்னதாகவே உறுதிப்படுத்தியது இதன் விலை $500 இருக்கும் என கணிக்கப்படுகிறது.

கடந்த மார்ச் 23 ஆம் திகதி நடைபெற்ற நத்திங் நிகழ்ச்சியில் அதன் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் கார்ல் பெய், நத்திங் போன் 1 குறித்து அறிவித்தார். இந்த நிகழ்வில் நத்திங் ஓஎஸ் இயங்குதளமும் அறிமுகம் செய்யப்பட்டது.

நத்திங் நிறுவனத்தின் சாதனம் ஆப்பிள் சாதனங்களுக்கு இணை போட்டியாக வரும் என இந்த நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.

 

SHARE