தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இது மகிழ்ச்சி தரக்கூடிய விடயமாக இருக்கிறது மட்டுமல்லாது தமிழ்த்தேசியத்தில் பற்று வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் நன்மைபய்க்கும் விடயமாகும். மட்டுமன்றி தமிழிழ விடுதலைப்புலிகளில் இருந்தவர்களுக்கும் தேசப்பற்றாளர்களுக்கும் இது ஆறுதல் செய்தியாக அமையும் .
இலங்கை அரசினால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நேரத்திலும் இராணுவத்தினரால் ஏற்ப்படுத்தப்படும் இம்சைகளுக்கும் ஒரு படிப்பினையாக அமையும் என்று எதிர் பார்க்கின்றோம்.
எதிர் காலத்தில் தமிழ் மக்கழின் போரட்டங்களுக்கு உந்து சக்தியாக இருக்கிறது. இவ்வாறான தடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை சந்தோசத்தை ஏற்படுத்தும் அதே சமயம் அரசங்கத்திற்கு வெறுப்பூட்டும் செயலாக அமைகிறது ஐரோப்பியஒன்றியத்தின் தடைநிக்கத்தைப் பார்த்து ஏனைய நாடுகளும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கலாம். இலங்கை அரசைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களாகிய நாம் இத்தடைநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் பரிய அரசியல் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளக்கூடும் என்ற சந்தேகம் அரச தரப்பில் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்துள்ளது ஆகவே எமது அரசியல் நடவடிக்கைகளை மிக புத்தி சாதூரியமாகவும் இராஜதந்திரரிதியாகவும் மேற்கொள்ளவேண்டும் என்றார்.