ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய ஜோர்டன் விமானியை விருந்தினர் போல் நடத்துமாறு, அவரது தந்தை உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஈராக் மற்றும் சிரியாவில் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகிறது.
இதை எதிர்த்து, அமெரிக்கா தலைமையில் ஜோர்டான் உள்ளிட்ட அரபு நாடுகளின் கூட்டு படையினர், போர் விமானங்களில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜோர்டான் விமானி முத் அல் கசீஸ்பி சென்ற விமானம் சிரியாவின் வடகிழக்கு பகுதியில் திடீரென்று விபத்துக்குள்ளானது. இதில் உயிர் தப்பிய முத் அல் கசீஸ்பியை, ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்து ரகசிய இடத்தில் சிறை வைத்துள்ளனர். மேலும் இவர் சன்னி பிரிவினர் என்பதால் தீவிரவாதிகள் இவரை விட்டு வைக்கமாட்டர்கள் என கூறப்படுகிறது. எனவே இவரது தந்தை சயிப் அல் கசீஸ்பி, தொலைக்காட்சி ஒன்றின் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு பேட்டியளித்துள்ளார். பேட்டியில் அவர் பேசியதாவது, என் மகனை பிணைக்கைதியாக்க வேண்டாம். அவன் சிரியா இஸ்லாமிய நாட்டில் உள்ள நம் சகோதரர்களின் விருந்தினர். கடவுள் பெயரால், இறை தூதர் நபியின் கருணையால் விருந்தினர் என்ற முறையில் வரவேற்பும், உபசரிப்பும் தாருங்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.
|