ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

362

 

ஈராக்கில் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலைத் துண்டித்து படுகொலை செய்ததை மக்கள் நேரடியாக வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஈராக் மற்றும் சிரியாவின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ் தொடர்ந்து பல அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

 is_execute_002

இந்நிலையில் ஈராக்கில் ஐ.எஸ் அமைப்பின் தலைமையகமாக விளங்கும் மொசூல்(Mosul) நகரின் வடக்கு பகுதியில் திருட்டில் ஈடுபட்ட 4 நபர்களை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.

இவர்களை சோபாவில்(Sofa) அமர வைத்து பல கேள்விகளை கேட்டு தீவிரவாதிகள் விசாரணையை நடத்தியுள்ளனர்.

சிறிது நேரத்திற்கு பிறகு, கண்களை கட்டியவாறு, நகரின் மையத்திற்கு அழைத்து வந்து சாலையில் மண்டியிட செய்துள்ளனர்.

அப்போது அந்த நபர்கள் புரிந்த குற்றங்களை தீவிரவாதிகளில் ஒருவன் ஒலிப்பெருக்கியின் மூலம் மக்களிடம் விவரிக்கிறான்.

இதன்பின் திருடர்களின் கண்களை கட்டி, அவர்கள் தலைகளை துண்டித்து கொடூரமாக படுகொலை செய்யப்படுகின்றனர்.

இறுதியில் இவர்களது சடலங்களை சிலுவையில் தொங்கவிட்ட தீவிரவாதிகள் அதனை நகரத்தின் நடுவே எச்சரிக்கும் வகையில் வைத்துள்ளனர்.

இந்த படுகொலையை காண சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கூடி நின்று வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.

SHARE