காலி – வதுரப பகுதியில் இன்று மாலை நடைபெறவிருந்த பிரச்சார கூட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடைக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.
இரண்டு டிபேன்டர்களில் வந்த குழுவினரே இன்று அதிகாலை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர்கள் அலங்காரங்களுக்கு தீ வைத்தமையால் வாகனம் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கல்நெவ – கலங்குடிய மவாத்தகம பிரசேத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் நான்கு மோட்டார் சைக்கிள்களுக்கும் ட்ரக் ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஐ.தே.கட்சியின் கூட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த 5 பேர் கைது
குருணால், மாவத்தகம – கல்னேவ பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்தில் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரில் 5 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது ரி.56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் ரவை கூடுகளும் சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 5 மோட்டார் சைக்கிள்கள், ஒலிப்பரப்பு கருவிகளுடன் கூடிய லொறி ஒன்றையும் சேதப்படுத்தியுள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.