ஐ.நாவின் யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு – ரணில் அறிவிப்பு

444

 

ஐ.நாவின் யுத்தக்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு – ரணில் அறிவிப்பு

சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இந்தியாவின் என்.டி.ரீ.வி இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அமைப்புக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைத்து செயற்படும்.

ஆனால் சர்வதேச சட்டங்களின் கீழ் சிறிலங்காவிற்குள் யாரையும் தண்டிக்க இடமளிக்கப்படமாட்டாது என்று அவர் கூறியுள்ளார். குற்றவாளிகள் உள்நாட்டு சட்டத்திட்டங்களின் அடிப்படையிலேயே கையாளப்படுவார்கள் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

1969408_1438736119749650_8720508599776726199_n 200951164825629734_5 Karunab1
SHARE