ஐ. நாவில் ஈழப் பெண்கள், சிறுவர்கள் விவகாரம் – பேராசிரியர் இராமு..மணிவண்ணன் உரை

291
ஐ.நா மனித உரிமைச் சபையில் இலங்கையில் தமிழ் பெண்களும் குழந்தைகளும் தலைப்பில் “OCAPROCE INTERNATIOAL” என்ற அமைப்பின் சார்பாக மகாநாடு ஒன்று  நேற்று இடம்பெற்றது.

 இதில் கலந்து கொண்ட பேராசிரியர் இராமு. மணிவண்ணன் யுத்தத்தின் காரணமாக 8 ஆயிரத்து 900 இற்கும் அதிகளவான வட கிழக்கு பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் விவாதித்துள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்தினால் அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள்கி டைக்க பெற்றுள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற அநியாயங்களை தமிழ்பெண்களுக்கான பகிர்வு அத்துடன் தமிழ்பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்கு முறைகள் என்பன இறுதி கட்டயுத்தத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்இ ஆதாரங்கள் தகவல்கள் கிடைக்கபெற்றுள்ளன என ஐ.நாசபை குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறான அத்துமீறல்களை நடத்திய இலங்கை இராணுவத்திற்கு அரசாங்கத்தின் சம்மதத்தினுடனேயே இச் செயலை புரிந்துள்ளனர்.

அதிகளவான துஷ்பிரயோகங்களுக்கு இப் பெண்களை உட்படுத்தியுள்ளனர். எனவும் மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன. 1948ம் ஆண்டு ஐ.நா சபையின் தீர்மானத்தின் படி பெண்களை பாதுகாக்க வேண்டிய கடமை, பொறுப்பு எமக்கேயுரித்தானது. என்பதையும் பெண்களை பாலியல் பலாத்காரங்களுக்கோ, விபச்சாரத்திற்கோ, ஈடுபடுத்துபவர்களை குற்றப்புலனாய்வின் அடிப்படையில் தடைசெய்ய வேண்டும்.

இவ்வாறான செயல்களை கண்காணிப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் செஞ்சிலுவைசங்கம் (ஐ.சி.ஆர்.சி) ஸ்தாபிக்கப்பட்டது.

இவ்வாறான மோசடிகளை கண்காணிப்பதற்கு சில முக்கிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக 1995ம் ஆண்டு ரிச்சட்கொட்சனினால் கூறப்பட்டது.

இவ்வாறான துஷ்பிரயோகத்திற்கு எதிரான சர்வதேச உயர்நீதிமன்றத்தில் ஆஜரான ஐ.சி.ரி.வை ருவாண்டாவில் இடம்பெற்ற சர்வதேச மன்றில் குறிப்பிடப்பட்டிருந்தமை ஞாபகப்படுத்த வேண்டியதாகும்.

இலங்கையில் நன்கு திட்டமிடப்பட்ட பாலியல் செயல்களுக்கு இலங்கை அரச படை வீரர்களை முன்னாள் அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக வழி நடத்திய தோடு, இதன் முக்கிய காரணமாக தமிழர்களை எந்த நேரத்திலும் அடக்கி அவர்களது காலடியில் வைத்திருந்தயேயாகும்.

மேலும் குறித்த பாலியல் துஷ்பிரயோகங்கள் கலாச்சாரத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சாதாரண பொதுமக்களை அழிப்பதற்கும் வட கிழக்கு தமிழ் பெண்களை ஆயுதமாக பயன்படுத்தினர்.

இறுதி யுத்தத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்ற செயல்களுக்குட்பட்ட பெண்களின் அனுபவவமும் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் துஷ்பிரயோகத்தின் அடக்குமுறைகளும் தமிழ் பெண்களை சோதனை சாவடிகளிலும், தடுப்பு முகாம்களிலும் பாலியல் செயலுக்கு உட்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் சர்வதேச சமூகநல அமைப்பினால் உஜித்தம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயல்களில் தனிமனித பாதுகாப்புக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகளவு இடம்பெற்றுள்ளது என மேல் குறிப்பிட்ட ஆதாரங்கள் மூலம் தெரிய வருகின்றது என தெரிவித்தார்.

SHARE