ஐ.நா அதிகாரிகளின் உயர் மட்ட தரப்பினரையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திக்கவுள்ளார்.

42

 

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்கவுள்ளது.

இந்த விஜயத்தின் போது, அமைச்சர்கள் மட்டத்திலான பல கூட்டங்களில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.

அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77 ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, இலங்கை சார்பில் உரையாற்றவுள்ளார்.

உயர்மட்ட சந்திப்புகள்

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்பு | Ali Sabry Leads Sl Delegation To Unga In New York

அத்துடன் நியூயோர்க்கில் நடைபெறும் ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு, 77 நாடுகளின் குழு மற்றும் சீனாவின் வெளிவிவகார அமைச்சர்களுடனான சந்திப்பு, உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் சந்திப்பு, அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு ஆகியவற்றில் அலி சப்ரி பங்குபற்றவுள்ளார்.

இதனைத் தவிர ஐநா உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் வெளிவிவகார அமைச்சர் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.

 

 

மேலும் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அதிகாரிகளின் உயர் மட்ட தரப்பினரையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திக்கவுள்ளார்.

 

இலங்கைக்கான தூதுக்குழு

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் அலி சப்ரி தலைமையிலான குழு பங்கேற்பு | Ali Sabry Leads Sl Delegation To Unga In New York

இலங்கைக்கான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி மொஹான் பீரிஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் தூதரகத்தின் அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் உயர்மட்ட அமர்வானது, எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE