ஐ.நா பொதுச்சபைத் தலைவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்:-

591
Un di_CI

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் டொக்டர் ஜோன் வில்லியம் ஆசீ (John William Ashe) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

2014ம் ஆண்டு உலக இளைஞர் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐக்கிய நாடுகள் அமைப்பின் மிக முக்கியமான அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுச் சபையில் சகல உறுப்பு நாடுகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் விசேட பிரதிநிதி அஹமட் அல்தவானி மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் ஏனைய பல முக்கியஸ்தர்களும் மாநாட்டில் பங்கேற்ற உள்ளனர்.

ஹம்பாந்தோட்டை மாகம்புர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

SHARE