ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 69 ஆவது கூட்டத்தொடரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் இம் மாதம் 16ஆம் திகதி முதல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரையில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இம்மாதம் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள பொது விவாதத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இக்கூட்டத்தொடரில் கலந்துகொள்ள 21 ஆம் திகதி நியூயோர்க் நோக்கி ஜனாதிபதி மஹிந்த பயணிப்பானர் என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.