ஐ.நா.மனித உரிமை கமிஷனில் வாதாட பாகிஸ்தான் வக்கீல்: இலங்கை ஏற்பாடு

476
இலங்கையில் உச்சகட்ட உள்நாட்டுப் போர் நடந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையில் சிக்கினால் தண்டனைக்குள்ளாவது நிச்சயம் என்ற நிலையில், இலங்கை அரசின் போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தி வாதாட ஒரு வக்கீலை தேடிவந்த ராஜபக்சே அரசு, தற்போது அந்த பணியினை பாகிஸ்தானை சேர்ந்த பிரபல வக்கீல் ஐட்ஸாஸ் அஹ்சன் என்பவரிடம் ஒப்படைத்துள்ளது.

மனித உரிமை சட்டங்களில் நிபுனத்துவம் வாய்ந்தவர் என்று கூறப்படும் இவர், பாகிஸ்தானின் சர்வாதிகாரியாக இருந்த முஷரப்பின் விமானத்தை 1999-ம் ஆண்டு நவாஸ் ஷரீப் கடத்தியது தொடர்பான மனித உரிமை மீறல் வழக்கில் திறம்பட வாதாடியவர் என்பதை அறிந்த ராஜபக்சே, அவரையே ஐ.நா. மனித உரிமை வழக்கில் இலங்கை அரசின் சார்பில் வாதாட அனுப்பி வைத்து உதவுமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப்பிடம் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, நவாஸ் ஷரீப்பின் அறிவுரையின்படி ஐட்ஸாஸ் அஹ்சன் கடந்த வாரம் இலங்கைக்கு வந்து, ராஜபக்சேவை சந்தித்து, ஐ.நா. வழக்கு தொடர்பாக சில அறிவுரைகளையும் கூறிச் சென்றதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE