ஒன்ராறியோவில் திடீரென தீப்பிடித்ததில் நேர்ந்த கதி!

23

 

ஜோர்ஜினாவில் நேற்று பிற்பகல் வீட்டில் தீப்பிடித்ததில் ஒருவர் உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

கனடா யோர்க் பிராந்திய பொலிசார் கூறுகையில், ஹை ஸ்ட்ரீட் அருகே உள்ள ஒரு குடியிருப்பில், பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது.

பணியாளர்கள் வருவதற்குள் வீடு முழுவதுமாக தீ சூழ்ந்ததால் சம்பவ இடத்திலேயே ஒருவர் இறந்து கிடந்ததாக பொலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தீ அணைக்கப்பட்டதை தொடர்ந்து ஒன்ராறியோ தீயணைப்பு படை வீரர் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக பொலீசார் தெரிவித்தனர்.

மேலும் புலனாய்வாளர்கள், அந்தப் பகுதியில் ஏதேனும் ஒன்றைப் பார்த்த அல்லது கேட்டிருந்தால் தயவுசெய்து முன்வருமாறு வேண்டுகோள் விடுத்ததாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE