ஒன்றாரியோவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோட்டார் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்பதுடன், மோட்டார் வாகன சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றாரியோவின் கியூல்ப் பகுதியின் ஆறாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெலிங்டன் வீதி என்பனவற்றுக்கு இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து காரணமாக குறித்த வீதிகள் சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விபத்துச் சம்பவத்திற்கான காரணங்கள் கண்டறியப்படவில்லை எனவும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.