ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து வெளியுறவு அமைச்சுக்கு தெரியாது – மஹிசினி கொலன்னே

141
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை விஜயம் குறித்து தமக்கு தெரியாது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் ஒபாமா இலங்கை வரவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார். எனினும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே, இந்த விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தமக்கு தெரியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த வருட இறுதியில் ஒபாமா ஆசிய நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளதென்று கொலன்னே தெரிவித்துள்ளார். இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் இலங்கைக்கான முதல் விஜயம் என்ற வகையில் ஒபாமாவின் வருகையை அரசாங்கம் வரவேற்பதாகவும் கொலன்னே கூறியுள்ளார்.

SHARE