ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார் இலங்கையின் புதிய தூதுவர் பிரசாத் காரியவசம்,

404
அமெரிக்காவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதுவர் c, அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்கவுள்ளார்.

அமெரிக்கா, வோஷிங்டனில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகம் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

இந்த சந்திப்பு எதிர்வரும் ஜுலை 14ம் திகதி வெள்ளை மாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்தியாவுக்கான இலங்கையின் தூதுவராகக் கடமையாற்றிய பிரசாத் காரியவசம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக கடந்தவாரம் நியமிக்கப்பட்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய நியமனப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

இவருக்கு முன்னர் இலங்கைத் தூதுவராக ஜாலிய ஜயசூரிய கடமையாற்றியிருந்தார்.

இவருக்கு பதிலாகவே தற்போது அமெரிக்காவுக்கான இலங்கைத் ததுவராக பிரசாத் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

SHARE