ஒபாமா அமெரிக்காவை பலவீனப்படுத்தி விட்டார்

465

இதில், 55 சதவீதம் மக்கள் அமெரிக்காவை ஒபாமா பலவீனப்படுத்தி விட்டதாக கருத்து தெரிவித்துள்ளனர். வெறும், 35 சதவீதம் பேர் மட்டுமே ஒபாமாவின் ஆட்சியில் அமெரிக்கா பலமாக உள்ளதாக கூறியுள்ளனர்.

இவர்களில் 68 சதவீதம் பேர், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் ஆட்சியை விட செயல் திறனில் ஒபாமாவின் ஆட்சி பின் தங்கியுள்ளது என்றும், 48 சதவீதம் பேர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் ஆட்சி போல் ஆற்றல் மிகுந்ததாக இல்லை எனவும் கூறியுள்ளனர்.

அவரது தலைமைத் தகுதியை சிறந்ததென 39 சதவீதத்தினரும், மோசமானது என 61 சதவீதம் மக்களும் சான்றுரைத்துள்ளனர். இதேபோல், ஒபாமா கடைபிடிக்கும் வெளியுறவு கொள்கை தொடர்பாக 56 சதவீதம் பேர் அதிருப்தியும், 33 சதவீதம் பேர் திருப்தியும் தெரிவித்துள்ளனர்.

ஒபாமாவின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை 39 பேர் ஆதரிக்கும் அதே வேளையில், 58 சதவீதம் பேர் எதிர்க்கின்றனர் என்பதும் இந்த கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

 

SHARE