ஒருநாள் போட்டியில் மோதல்: டோனி, ரெய்னா டாக்கா பயணம்

176
 

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணித்தலைவர் டோனி, ரெய்னா வங்கதேசத்திற்கு சென்றுள்ளனர்.

இந்திய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ‘டிரா’ ஆனது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி வருகிற 18ம் திகதி தொடங்குகிறது.

ஒருநாள் போட்டிகளுக்கு டோனி அணித்தலைவராக இருக்கிறார். இதனால் டோனி வங்கதேசத்திற்கு சென்றுள்ளார்.

இவருடன் சுரேஷ் ரெய்னா, அம்பதிராயுடு, ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி, குல்கர்னி ஆகியோரும் டாக்கா சென்றுள்ளனர்.

அதே சமயம் ஒருநாள் அணியில் இடம்பெறாத முரளி விஜய், புஜாரா, விருத்திமான் சகா, கரண்சர்மா, ஹர்பஜன்சிங், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் நாடு திரும்பியுள்ளனர்.

SHARE