ஒரு காதல் வார்த்தை கூட யாரும் சொல்லல’ காதலர் தினத்தில் சார்மி விரக்தி 

348
டோலிவுட் இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், டைரக்டர் புரி ஜெகனாத் இருவருடனும் இணைத்து காதல் கிசுகிசுவில் சிக்கியவர் சார்மி. ஆனால் இருவருமே இதை மறுத்திருந்தனர். காதலர் தினத்தில் தனக்கு யாராவது வாழ்த்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்த சார்மிக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.விரக்தி அடைந்த அவர் தனக்கு தானே இணைய தள பக்கத்தில் மெசேஜ் அனுப்பிக்கொண்டார். ‘26 வயது இளம் பெண்ணான நான் பார்க்க அழகாக இருப்பேன். மாசுபடாத மனதுடன் இருக்கிறேன். ஆனால் உண்மையான ஒரு காதல் வார்த்தைகூட யாரும் எனக்கு சொல்லவில்லை.

எதிர்பார்ப்புகள் எப்போதுமே ஏமாற்றத்தைத்தான தரும். இனியும் எதற்காக காத்திருக்க வேண்டும். எனக்கு நானே காதலர் தின வாழ்த்து கூறிக்கொள்கிறேன். என்னைவிட வேறுயார் என் மீது அன்பு செலுத்திவிடப்போகிறார்கள். இதுதான் உண்மை. தனியாக பிறந்தோம் தனியாக இறப்போம். தனியாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும். உன்னை நீயே காதலிக்க கற்றுக்கொள்’  இவ்வாறு விரக்தியாக அவர் டுவிட் செய்திருக்கிறார்.காதல் தோல்விதான் சார்மியை இப்படியெல்லாம் மெசேஜ் போட வைக்கிறது என டோலிவுட்டில் பேசிக்கொள்கிறார்கள்

 

SHARE