ஒரு நாள் ஆசிரியராக மாறிய டோனி

174
ஜார்க்கண்ட மாநிலத்தில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளார்.ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளிக்கு டோனி சென்றுள்ளார்.டோனி வருகையை முன்னிட்டு பள்ளியில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விழாவில் பங்கேற்ற டோனி, பள்ளிக்கு 100 சதவீத வருகை தந்த மாணவ மாணவிகளுக்கு விருது அளித்து பாராட்டினார்.

மேலும் மாணவ மாணவிகளுக்கு கிரிக்கெட் குறித்து பாடமும் நடத்தியுள்ளார்.

டோனி தற்போது ஓய்வில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE