ஒரு பக்கம் நெஞ்சுவலி ஏற்படுவது ஏன்? அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.. ஆபத்து!

214

மார்பு பகுதியில் வலி ஏற்பட்டால் உடனே நாம் அனைவரும் இதயத்தில் ஏதோ பிரச்சனை என்று தான் நினைப்போம். ஆனால் ஒரு பக்கம் மார்பு பகுதியில் வலித்தால் அதற்கு பல காரணங்கள் உண்டு.

மார்பு பகுதியில் தான் நுரையீரலும் உள்ளது. அதிலும் பிரச்சனைகள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே மார்பின் ஒரு பக்கத்தில் மட்டும் வலித்தால் சாதாரணமாக இருக்கக்கூடாது.

எலும்பு முறிவு

மார்பு பகுதியில் விலா எலும்பில் ஏற்பட்டுள்ள முறிவு கூட வலிக்கு காரணமாக இருக்கலாம்.

குருத்தெலும்பு அழற்சி

விலா எலும்புகளில் உள்ள குருத்தெழும்புகளில் ஏற்பட்டு அழற்சி காரணமாக கூட நெஞ்சு வலி ஏற்படலாம். சில நேரங்களில் மார்பு பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டுள்ள வீக்கத்தின் காரணமாக கூட வலி ஏற்படலாம்.

புற்றுநோய்

குறிப்பிட்ட ஒரு வகையான நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டால் மார்பின் ஒரு புறத்தில் தான் வலிக்கும். புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனே கைவிட்டு உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

வைரஸ் தொற்றுகள்

வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் புண்களால் மார்பின் ஒரு புறத்தில் வலி ஏற்படும். சில நேரத்தில் நுரையீரல் இரத்தத்தின் அளவு குறைவாக சென்றாலும் வலி ஏற்படும்.

மார்பு தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படும் போது அதிக எடையுள்ள பொருள்களை தூக்கும் போது மார்பு தசைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு வலி ஏற்படும்.

தொற்றுகள்

காசநோய், நிமோனியா போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலும் மார்பின் ஒரு பக்கத்தில் மட்டும் வலி ஏற்படும்.

அதிகப்படியான அமில சுரப்பு

அதிகப்படியான அமில சுரப்பும் நெஞ்சரிச்சலும் கூட காரணமாகும். நெஞ்சரிச்சல் மற்றும் மார்பு பகுதியில் இதனால் வலி ஏற்படும். மார்பு பகுதியில் வலி இருந்தால் கட்டாயம் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

SHARE