ஒரு பாடலுக்கும் நடனமாடும் நடிகைகள்

399

முன்பெல்லாம் படத்தில் இடம் பெறும் சில பாடல்களுக்கு கவர்ச்சி நடிகைகள் மட்டுமே நடனமாடி வந்தார்கள். ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி, பபிதா, அல்போன்சா, முமைத் கான் என இந்த பட்டியல் நீளும்…ஆனால் இப்போதெல்லாம் பல முன்னணி நடிகைகளே இம்மாதிரியான பாடல்களுக்கு நடனமாடி விடுகிறார்கள். கதாநாயகியாக இருக்கும் போதே இம்மாதிரியான பாடல்களில் நடனமாடிய பலர் இருக்கிறார்கள். இப்போதும் அதே மாதிரி பலரும் நடனமாடி வருகிறார்கள். தமிழ் சினிமாவில் இது அவ்வப்போது நடந்தாலும் தெலுங்கில் இதை ஒரு ஃபேஷனாகவே மாற்றி விட்டார்கள். சமீப காலமாக அங்கு ஒரே ஒரு பாடலுக்கு முன்னணி நடிகைகளை நடனமாட வைப்பது வழக்கமாகி விட்டது.
சமீபத்தில் வெளிவந்த அல்லுடு சீனு படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு நடனமாடினார். இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் சமந்தா. தற்போது கீதாஞ்சலி என்ற புதிய படத்தில் அஞ்சலி நாயகியாக நடிக்கும் படத்தில் ஸ்ருதிஹாசன் நடனமாட உள்ளாராம். அதே போல் கோ கோ கோபாலா என்ற படத்தில் ப்ரியாமணி ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார். இந்தப் படத்தில் நாயகியாக நடிப்பவர் ஸ்ரேயா. இப்படி மற்ற கதாநாயகிகள் நாயகியராக நடிக்கும் படங்களிலும் வேறு நாயகியர் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடுவதை எந்த பொறமையும் இல்லாமல் ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம்தான் என்கிறார்கள். சிலர் தயாரிப்பாளருக்காகவும், இயக்குனருக்காகவும், ஹீரோக்களுக்காகவும் நடிக்க சம்மதிக்கிறார்கள். இதனால், ஒரு பாடலுக்கு மட்டுமே நடிக்கும் நடிகைகளின் வாய்ப்பை முன்னணி ஹீரோயின்கள் தட்டிப் பறிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
SHARE