ஒரே இலக்கை நோக்கி செல்லும் கோஹ்லி, டோனி: சொல்கிறார் சமி

341
டோனி, கோஹ்லி வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களின் இலக்கு ஒன்று தான் என்று மேற்கிந்திய தீவுகளின் டேரன் சமி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் மேற்கிந்திய தீவுகளின் முன்னணி வீரரான டேரன் சமி பெங்களூர் அணிக்காக விளையாடினார். இவர் வங்கதேசத் தொடரில் அணித்தலைவராக விளையாடும் கோஹ்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோஹ்லி பற்றி டேரன் சமி மேலும் கூறுகையில், விராட் கோஹ்லியின் விளையாட்டு திறமை அனைவருக்கும் தெரியும். அவர் அணித்தலைவர் பதவியில் ஜொலிக்க விரும்புகிறார்.

டோனியும், கோஹ்லியும் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்கள். ஆனால் அவர்களின் இலக்கு ஒன்று தான்.

கோஹ்லி பெங்களூர் அணியில் செயல்பட்டது போன்று இந்திய அணியில் செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE