ஒரே ஒரு தொற்று! நாடு முழுவதும் அவசர நிலை அறிவிப்பு!

148

 

கடந்த 2019ம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக பரவிய வந்த நிலையில் வடகொரியா அரசு தனது நாட்டில் கொரோனா தொற்று இல்லை என மறுத்து வந்தது.

இந்நிலையில் தற்போது அந்நாட்டில் முதல் Covid19 தொற்று ஏற்பட்டுள்ளதாக வடகொரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் கடுமையான தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில்,  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியதாவது:- தீவிரமான சூழல் ஒன்று உருவாகியுள்ளது. நமது தேசத்தில் ஓமிக்ரோன்  வைரஸ் சத்தமில்லாமல் நுழைந்துவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் தேசிய அவசர நிலை அறிவிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான அனைத்து கதவுகளும் அடைக்கப்படுகிறது.

மக்கள் கொரோனா தொற்றை ஒழிக்க ஒன்று சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும் என வடகொரிய அதிபர் கூறினார்.

SHARE