
அண்மையில் ஹிங்குராக்கொட பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையோ அல்லது நாடாளுமன்றமோ இன்று நாட்டை ஆட்சி செய்யவில்லை.
எந்தவொரு அமைச்சரும் நாட்டில் தீர்மானம் எடுக்கும் பொறிமுறையில் பங்களிப்பு வழங்குவதில்லை.
அனைத்து நடவடிக்கைகளும் ராஜபக்சாக்களின் தாளத்திற்கு ஏற்ற வகையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
நாடாளுமன்றை இன்று ராஜபக்சாக்கள் விழுங்கியுள்ளனர்.
தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீன், கருவாடு, இறைச்சி வகைகளைப் போன்று விலை போகின்றனர்.
2017ம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவிருந்தது.
அந்தக் காலத்தில் தேர்தல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது ராஜபக்சாக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஒரே குடும்பம், ஒரே கூட்டம் ஆட்சி நடத்தி வந்தால் பாரிய இரத்த பெருக்கின் பின்னரே ஆட்சி மாற்றம் ஏற்படும்.
எனவே எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதி மஹிந்த மூன்றாம் தவணைக்காக ஜனாதிபதி பொறுப்பினை ஏற்றுக்கொள்வதனை நிறுத்திவிட வேண்டும்.
பொருளாதாரம் பற்றி ஜனாதிபதி செய்து வரும் பிரச்சாரம் முற்று முழுதான பொய்யாகும். மொத்த தேசிய உற்பத்தியில் மாற்றமின்றி பாதைகளை அமைப்பதில் பயனில்லை.
நீதிமன்றம் மட்டுமன்றி பொலிஸ் திணைக்களமும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோனின் கடமைகளை முன்னாள் பொலிஸ் மா அதிபரும், சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளருமான மஹிந்த பாலசூரியவே மேற்கொள்கின்றார்.
நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது. நாம் சொல்லும் விடயங்களை ஊடகங்களில் வெளிப்படுத்துகின்றார்கள்.
எனினும், ராஜபக்சாக்களுக்கு எதிரான விடயங்களை ஊடகவியலாளர்கள் அம்பலப்படுத்துவதில்லை என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.