ஓய்வுபெறும் எண்ணமில்லை: மைக்கேல் கிளார்க் திட்டவட்டம்

185
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.ஆட்டத்திறன் (பார்ம்) இன்றி வேதனையில் தவிக்கும் மைக்கேல் கிளார்க் ஆஷஸ் டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின.இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள கிளார்க், தற்போது எனது ஆட்டத்திறன் (பார்ம்), விமர்சிக்கப்படுவதற்கு தகுதியானது தான். அதுவும் ஒரு அணியின் தலைவராக இருக்கும் போது, ஆட்டம் மோசமாக இருந்தால் விமர்சனங்கள் வரத் தான் செய்யும்.

ஆனால் சில பத்திரிகைகள் கிரிக்கெட்டில் உள்ள எனது ஆர்வம், அர்ப்பணிப்பு குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.

இன்னும் சிலர், இந்த தொடருடன் நான் விடைபெற்று விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். இவை எல்லாம் முற்றிலும் அபத்தமானவை, மேலும் இப்போதைக்கு கிரிக்கெட்டில் இருந்து விலகும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

SHARE