ஓரினசேர்க்கையாளர்களை கல்லால் அடித்தே கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகள்

175

 

ஓரின சேர்க்கையாளர்கள் இருவரை ஐ.எஸ் அமைப்பினர் கட்டிடத்தில் இருந்து கீழே தள்ளியும் கல்லால் அடித்தும் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

is_stone_05

சிரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பினர்களின் வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

அவர்கள் பல தரப்பினரையும் கொடூரமாக கொன்று வருகின்றனர். இந்நிலையில் ஓரினசேர்க்கையாளர்கள் என குற்றம் சாட்டப்பட்ட இருவரை அவர்கள் கொலை செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

அதில் அவர்களை உயரமான கட்டடத்துக்கு அழைத்து செல்லும் ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை கீழே தள்ளிவிடுகின்றனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் சிறுவர்களும் இந்த சம்பவத்தை வேடிக்கை பார்க்கின்றனர்.

பின்னர் கீழே விழுந்த அவர்களை கல்லால் அடித்து கொலை செய்யும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ சிரியாவின் ஹோம்ஸ் பகுதியில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்துவரும் ஐ.எஸ் அமைப்பினரின் வன்முறை சம்பவங்கள் உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

SHARE