ஓ காதல் கண்மணி இரண்டு நபர்களின் உயிரை பறித்தது- அதிர்ச்சி தகவல்

323

மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படம் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கோயமுத்தூரில் ஒரு காதலன் தன் காதலியை இப்படத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு காதலி வரமுடியாது என்று கூறியதால், அந்த காதலன் தூக்குப்போட்டு இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போல் வேறு ஒரு பகுதியில் தன் கணவனை, மனைவி இப்படத்திற்கு அழைக்க, அவருக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் வர மறுத்து விட்டார். இதனால் மனைவி கோபத்தில் விஷம் குடித்து இறந்து விட்டாராம்.

SHARE