கங்குலி பாணியில் இந்தியாவை வழிநடத்தும் விராட் கோஹ்லி: ஸ்டீவ் வாக்

330

இந்திய அணியை வழிநடத்தும் விராட் கோஹ்லியின் திறமை முன்னாள் தலைவர் கங்குலியை ஒத்து இருப்பதாக ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி ஆக்ரோஷமான பாணியின் இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்தவர்.

இந்நிலையில் தற்போது புதிய டெஸ்ட் தலைவராக செயல்பட்டு வரும் கோஹ்லி அதே பாணியை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.

இது தொடர்பாக முன்னாள் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் வாக் கூறுகையில், “கோஹ்லியின் ஆக்ரோஷம் நிறைந்த குணம் அணித்தலைவர் பதவிக்கு தேவையான ஒன்று. இதனால் அவருடைய வழிநடத்தல் திறமை சிறிதளவு கங்குலியை ஒத்து இருக்கிறது.

அவர் ஆக்ரோஷமாக விளையாடுகிறார். இதனால் சில சமயம் மோசமான பக்கங்களையும் சந்திக்க நேரிடும். ஆனால் நான் அதைப் பற்றி கவலை கொள்ளவில்லை. அவரை இப்படி பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இலங்கையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது சிறப்பான விடயம். அவர் அணித்தலைவராக ஒரு போதும் ஓய்ந்து விடமாட்டார். இதுவே இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையும்” என்று கூறியுள்ளார்.

SHARE