நேற்றைய தினத்தில் இருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தினை இராணுவத்தினர், புலனாய்வினர் முற்றுகையிட்டதாகவும், தேசியத் தலைவரினுடைய பிறந்ததினம் மற்றும் மாவீரர் தினத்தினை கொண்டாடும் நோக்கில் இவ்வலுவலகம் செயற்படவிருப்பதாக அறிந்த தகவலின் அடிப்படையில் இவ்வாறு இராணுவத்தினர் நடந்துகொண்டனர். அதுமட்டுமல்லாது யாழ்ப்பாணம் நேற்றையதினம் பதற்றமான நிலையில் காணப்பட்டதாகவும், வீதியால் செல்பவர்கள் பலர் வழிமறிக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும், இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை எனவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கஜன் அவர்கள் தினப்புயல் இணையத்தளத்திற்குத் கருத்துத் தெரிவித்துள்ளார்.