கடந்த காலங்களில் இணங்கப்பட்டதன் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்

334
தமிழர்களின் பிரச்சினைகளுக்காக கடந்த காலங்களில் ஒப்புக் கொண்ட விடயங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று ஜனநாயக போராளிளகள் வலியுறுத்தியுள்ளனர்.

அவர்கள் நேற்று வெளியிட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

1987ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்து – இலங்கை உடன்படிக்கை மற்றும் 2002ம் ஆண்டு ஒஸ்லோ பேச்சுவார்த்தை போன்றவற்றில் சமஸ்ட்டி கொள்கையையும், சுய ஆட்சி மற்றும் வடக்கு –கிழக்கு மாகாணங்களை தமிழ் பேசும் மக்களின் பிரதேசமாக அங்கீகரிக்கவும் சிறிலங்கா இணங்கி இருந்தது.

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் த ஹிந்து பத்திரிகை, ஜனநாயக போராளிகளின் இணைப்பாளர் என்.வித்தியாதரனிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த கோரிக்கைகள் யதார்த்தமானதா? என்ற கேள்விக்கு பதில் வழங்கியுள்ள அவர் தாங்கள் புதிதாக எதனையும் கோரவில்லை என்றும் ஏற்கனவே சிறிலங்கா அரசாங்கம் இணங்கிக் கொண்ட விடயத்தையே கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Vidyadaran1

யாழ்ப்பாணத்தில் ஜனநாயக போராளிகள் அமைப்பு சுயேட்சையாக 10 வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

SHARE