கடற்கரை கூட்டத்திற்குள் புகுந்த விமானம்: அமெரிக்காவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் (வீடியோ இணைப்பு)

153

 

அமெரிக்க கடற்கரை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் கூட்டத்திற்குள் விமானம் ஒன்று எதிர்பாராத விதமாக புகுந்தது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஏற்படுத்தியுள்ளது.

planecrash_beach_002

கலிபோர்னியாவில் உள்ள Carlsbad என்ற கடற்கரையில் கடந்த சனிக்கிழமை அன்று சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் கை பந்து விளையாட்டில் ஈடுபட்டிருந்தனர்.

பிற்பகல் 3 மணியளவில் சிறுவர்கள் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருக்கையில், தூரத்தில் பைபர் PA18 என்ற சிறிய ரக விமானம் ஒன்று பறந்து வந்துள்ளது.

இந்த விமானத்தை சிறுவர்கள் யாரும் கவனிக்காமல் விளையாட்டில் முழ்கி இருந்துள்ளனர். அப்போது, கடற்கரையில் தரையிறங்க முயன்ற அந்த விமானம் அங்குள்ள ஒரு விளம்பர தட்டியில் சிக்கி தள்ளாடியவாறே தரையை நோக்கி வந்துள்ளது.

இந்நிலையில், கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் தங்களை நோக்கி ஆபத்தான நிலையில் ஒரு விமானம் வருவதை அறிந்து அங்கிருந்து சிதறி ஓடியுள்ளனர்.

ஆனால், தரையில் மோதி குட்டிக்கரணம் அடித்த அந்த விமானம் சிறுவர்களில் ஒருவன் மீது பலமாக மோதியுள்ளது.

எனினும், சிறுவன் தலையில் மட்டும் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள இளைஞர்கள் அவனை தூக்கிகொண்டு சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அதிகாரியான Ian Gregor, விமான விபத்தில் விமானிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், விமானத்தில் உள்ள என்ஜின் பழுதடைந்ததால் தரையிறங்க முடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

SHARE