கடலில் மூழ்கிய ரஷ்ய கப்பல் – 54 பேர் பலி 

313
ரஷ்யாவை சேர்ந்த மீன்பிடி கப்பல் ஒன்று மூழ்கியதில் 54க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா(Kamchatka) தீபகற்பத்தின் ஓகோட்ஸ்க்(Okhotsk) கடல் பகுதியில் 132 பயணிகளுடன் சென்ற மீன்பிடி கப்பல் ஒன்று நேற்று நள்ளிரவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதுவரை மீட்பு குழுவினரால் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 15 பேரின் நிலை என்ன? என்பது தெரியவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 100 டன் எடையுள்ள மீன்களை வலைவீசி இழுக்கும்போது, எடை தாங்காமல் கப்பல் மூழ்கி இருக்கலாம் அல்லது பனிப்பாறைகள் மீது கப்பல் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்த பகுதியில் மீன் பிடிக்க பயன்படுத்தப்படும் 25 படகுகளும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

SHARE