கடவுள் மறுபிறவி கொடுத்துள்ளார்! விபத்தில் சிக்கியவரின் உயிரைக் கைப்பற்றிய இந்திய வீரர்

47

 

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி விபத்தில் சிக்கிய நபர் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகமது ஷமி
உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடால் மலைப் பகுதியில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவரை காரில் இருந்து மீட்டுள்ளார்.

முகமது ஷமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சாலையில் விபத்தில் சிக்கிய நபருக்கு ஷமி உதவி செய்துள்ளார்.

நைனிடால் மலைப்பகுதியில் ஷமியின் வாகனத்திற்கு முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென வழியில் இருந்து விலகிய அந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதிர்ஷ்டசாலி
இதனால் பதறிப்போன ஷமி மற்றும் சிலர் விரைந்து சென்று காரில் இருந்த நபரை வெளியே கொண்டு வந்துள்ளனர். குறித்த நபர் இதனால் உயிர்தப்பியுள்ளார்.

தனது வீடியோவில் ஷமி, ‘அந்த நபர் அதிர்ஷ்டசாலி. கடவுள் அவருக்கு இரண்டாவது முறையாக வாழ்க்கையை கொடுத்திருக்கிறார். நைனிடால் அருகே, மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென பள்ளத்தில் கவிழ்ந்து விட்டது. நாங்கள் அவரை பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு வந்தோம்’ என குறிப்பிட்டுள்ளார்.

 

SHARE