கடிதம் எழுதிய புடின்…பதில் எழுத மறுத்த மெர்க்கல்

320
உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பும்வரை ரஷ்யாவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது என ஜேர்மனிய அதிபர் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனியின் ’நாசிச’ ஹிட்லரை வீழ்த்தியதில் ரஷ்ய நாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

எதிர்வரும் மே 9 ஆம் திகதி இரண்டாம் உலகப்போர் நடைபெற்று 70 ஆண்டுகள் நிறைவடைவதால், அதனை நினைவுக்கொள்ளும் வகையில் ரஷ்யா நாட்டின் ராணுவ அணிவகுப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜேர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

ஆனால், உக்ரைன் விவகாரத்தில் போராட்டக்காரர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து ஆயுதங்கள் வழங்கி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என மெர்கல் திட்டவட்டமாக கூறியுள்ளதாக அதிபரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், விளாடிமிர் புடின் அனுப்பிய கடிதத்திற்கும் பதில் கடிதம் அனுப்பாமல் மெர்க்கல் நிராகரித்துள்ளார்.

விளாடிமிர் புடினின் செய்தி தொடர்பாளாரான Dmitry Peskov என்பவர் கூறுகையில், ரஷ்யாவின் வெற்றியை கொண்டாடும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சில மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன.

இருப்பினும், அந்த நாடுகள் கலந்துக்கொள்ளாவிட்டாலும், இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவின் ராணுவ பலத்தின் சிறப்புகளை நினைவுகூர்ந்து, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிப்போம் என தெரிவித்துள்ளார்.

ஜேர்மனி உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில், உக்ரைனிற்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என கையெழுத்திட்ட ரஷ்யா, அந்த ஒப்பந்தத்தை மீறி சில நாட்களுக்குள் ஆயுதங்களை உக்ரைனிற்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

SHARE