கண்டியில் நடைபெறும் மகிந்த ஆதரவுக் கூட்டம்! கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சு- மஹிந்த பங்கேற்கவில்லை

335

 

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கக் கோரி விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் கண்டியில் இடம்பெற்று வருகின்றது.

இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றவர்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இக்கூட்டத்தில் ஐ.ம.சு கூட்டணியின் மாகாண சபை உறுப்பினர்கள் 87 பேர் கலந்து கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம, முன்னாள் ஆளுனர் டிகிரி கொப்பேகடுவ மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மக்கள் பிரதிநிதிகள் பலர் மேடையில் நின்று கொண்டே தான் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டிப் பேரணியிலும் மஹிந்த பங்கேற்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வலியுறுத்தும் இரண்டாவது பேரணியிலும் மஹிந்த ராஜபக்ச பங்கேற்கவில்லை.

கண்டியில் இந்தப்பேரணி இன்று இடம்பெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ச அனுப்பி வைத்த செய்தி ஒன்றே வாசிக்கப்பட்டது.

இந்தப் பேரணியை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பல கட்சிகள் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.

மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ உட்பட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

SHARE