கத்தி கதை திருட்டு மீண்டும் சூடு பிடித்துள்ளது

184


யக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் கதை தன்னுடைய கதை என்றும், தன்னுடைய கதையை திருடிவிட்டதாகவும் புகார் கூறிய மீஞ்சூர் கோபி நீதி மன்றம் வரை சென்று வழக்கு தொடர்ந்து அதனை பின்பு வாபஸ் பெற்றார். தற்போது ஆந்திராவை சேர்ந்த  நரசிம்ம ராவ் என்பவர் கத்தி படத்தி கதை தன்னுடையது என்று உரிமை கோரியிருக்கிறார். இவர் இயக்குநர் ஷங்கர் இயக்கிய நண்பன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார். அப்போது அவர் கத்தி படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னதாகவும், கதையில் இம்ப்ரஸ்ஸான விஜய் மீண்டும் மீண்டும் கதையை சொல்ல சொல்லி கேட்டதாகவும் அதனால் 4 முறை விஜய்யிடம் தான் கதையை சொன்னதாகவும் கூறியுள்ள நரசிம்மராவ், தான் ஆந்திராவில் இருந்ததால் தனது கதைதான் கத்தியாக படமாக எடுக்கப்படுவதாக தெரியமலிருந்ததாகவும் பிறகு படத்தைப் பார்த்து தனது கதை தனக்கு தெரியாமல் படமாக எடுத்துவிட்டார்கள் என கூறி தெலுங்கு ப்லிம் ரைட்டர் அசோசியேசனில் புகார் கொடுத்துள்ளதோடு, கத்தி கதை தான் 2010 ஆம் ஆண்டே இந்த அசோசியேசனல் பதிவு செய்திருப்பதாகவும் கூறியதால் நரசிம்மராவ் புகாரை தொடர்ந்து கத்தி படத்தை பார்த்த தெலுங்கு திரைப்படத்துறையினர் கத்தி படமானது நரசிம்மராவின் கதையிலிருந்து 80 சதவீத காட்சிகள் படத்தில் உள்ளதை உறுதி செய்துள்ளனர். அதனால் இப்புகாரை சென்னையிலுள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு அனுப்பி அவர்களின் பதிலுக்காக காத்துள்ளனர். இப்பிரச்னையில் நரசிம்மராவுக்கு நியாயம் கிடைக்கும் வரை தெலுங்கில் கத்தி படத்தை டப்பிங் செய்தோ வெளியிடவோ, ரீமேக் செய்யவோ கூடாது எனத தடை விதித்துள்ளதோடு, ஏ.ஆர். முருகதாஸை வைத்து யாரும் தெலுங்கில் படங்கள் தயாரிக்க கூடாதென்றும், தெலுங்கு படங்களின் ரீமேக் ரைட்ஸை விஜய் நடிப்பதற்கு யாரும் கொடுக்க கூடாது என்றும் தடைவிதித்துள்ளது தெலுங்கு திரையுலகம்.

 

SHARE