கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒன்றாரியோ மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

343
கனடாவில் காவல்துறை அதிகாரி ஒருவரால் வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தாக்கப்பட்ட ஒருவருக்கு 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒன்றாரியோ மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கனடாவில் கடந்த 2011ம் ஆண்டு, சனவரி 15ம் திகதி, Mutaz Elmardy என்பவர் ரொறன்றோ நகரத்தில் நடந்து சென்றபோது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.பின்னர் அவரது கைக்கு விலங்கிட்ட பொலிசார், அவரது முகத்தில் இரண்டு முறை குத்தியதோடு சுமார் 25 நிமிடம் அவரை விலங்கிட்டவாரே படுக்க வைத்திருந்துள்ளனர்.இதையடுத்து அந்தச் சம்பவம் தொடர்பாக ரொறன்றோ காவல்துறைச் சபைக்கும், Constable Andrew Pak என்பவருக்கும் எதிராக எல்மார்டி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த ஒன்றாரியோ மேல் நீதிமன்ற நீதிபதி, அவரைத் தடுத்து நிறுத்துவதற்கோ, சோதனையிடுவதற்கோ காரணம் எதுவும் இருக்கவில்லை.

மேலும், காவல்துறை அதிகாரி, சட்டத்தை அவரது கரங்களில் எடுத்துள்ளார் என்று கூறி 27,000 டொலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

resize_20121026105729

SHARE