கனடாவில் விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் இந்தியாவுக்கு சென்றது

83

 

கனடாவில், சாலை விபத்தொன்றில் பலியான இளைஞர் ஒருவருடைய உடல், 18 நாட்களுக்குப் பின் இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவின் பஞ்சாபிலுள்ள Bhador என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Sukhchain Singh (23). கனடாவில் வாழ்ந்துவந்த சிங் காரில் பயணிக்கும்போது அவரது காரும் ட்ரக் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.

படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக அவரது நண்பர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுவந்த நிலையில், 18 நாட்களுக்குப் பின் சிங்குடைய உடல் இந்தியா வந்தடைந்துள்ளது.

விடயம் என்னவென்றால், சிங்குடைய பிறந்தநாளுக்காக அவரது பெற்றோர் மகனைக் காண கனடா புறப்படுவதற்காக ஆயத்தங்களை செய்துகொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில்தான் சிங் விபத்தில் சிக்கினார். ஆக, மகனுடைய பிறந்தநாளைக் கொண்டாட இருந்த அவரது பெற்றோர், அவரது இறுதிச்சடங்கை நடத்தும் ஒரு துரதிர்ஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது.

சிங் வாழ்ந்த கிராமத்திலுள்ள அனைவரும் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட நிலையில், கண்ணீர் வடியாத கண்களே அங்கில்லை என்று கூறுமளவுக்கு மக்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

SHARE