கனடாவில் வேட்டையாடியோருக்கு ஏற்பட்ட நிலைமை

316

 

கடனாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மான் வேட்டையாடிய சிலருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு ஒன்றாரியோவின் மற்றும் தெமாகாமி ஆகிய பகுதிகளில் வேட்டையாடியவர்கள் இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு இந்த நபர்கள் வேட்டையாடியுள்ளனர். அனுமதியின்றி குறித்த வேட்டையாடியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

நோர்த் பேயைச் சேர்ந்த கோர்ட் மெக்மில்லன் என்ற நபருக்கு நீதிமன்றம் 6000 டொலர்கள் விதிக்கப்பட்டுள்ளது.

நோர்த் பேயைச் சேர்ந்த ஸாச்சாரி மெக்மில்லனுக்கு சட்டவிரோதமான அடிப்படையில் மான் இறைச்சி வைத்திருந்த குற்றத்திற்காக 2000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இறைச்சியை வைத்திருந்த குற்றத்திற்காக தெமாகாமியைச் சேர்ந்த மைக் மொலியோனெக்ஸ் என்பவருக்கு 500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மான் வேட்டையாடிய மற்றும் இறைச்சியை வைத்திருந்தவர்களுக்கு மொத்தமாக 8500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

SHARE