ரொறொன்ரோ- கனடாவை இலக்கு வைத்து ஒரு தனி-நபர் தாக்குதல் நடாத்தப்போவதாக இஸ்லாமிய அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாக SITE புலனாய்வு குழு ஞாயிற்றுக்கிழமை 6-நிமிடங்கள் 13-செக்கனட் வீடியோ ஒன்றை தனது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் தான் கனடியன் என கூறும் ஒரு மனிதன் தன்னை அபு அன்வர் அல்-கனடி என அடையாளம் காட்டி தனது முஸ்லீம் நாட்டவர், Martin Couture-Rouleau முன்மாதிரியை பின்பற்ற உள்ளார் என தெரிவித்துள்ளார்.
2013-ல் ISIS-ல் சேர்வதற்காக வெளிநாட்டு போராளியாக சிரியாவிற்கு பயணித்த பின்னர் John Maguire ஏற்கனவே ஆர்சிஎம்பியினரின் விசாரனையின் கீழ் உட்படுத்தப்பட்டுள்ளார். மிகவும் மோசமாக தயாரிக்கப்பட்டிருந்த இந்த வீடியோவில் இவர் ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.
Couture-Rouleau கடந்த ஒக்டோபர் மாதம் பற்றிஸ் வின்சன்ட் என்ற கனடிய வீரர்- பிடியாணை அதிகாரியை கொன்றதுடன் துரத்திச்சென்ற இன்னொருவரை காயப்படுத்தினார்.
மேலும் இந்த வீடியோ குறிப்புகள் Michael Zehaf-Bibeau என்பவரால் ஒக்டோபர் மாதம் ஒட்டாவா தேசிய போர் நினைவு சின்னத்திற்கு முன்னார் இடம்பெற்ற தாக்குதலையும் அதனை தொடர்ந்து பாராளுமன்ற முற்றுகையையும் வெளிப்படுத்தியுள்ளன.
இஸ்லாமிய அரசிற்கெதிரான போரில் அமெரிக்க-தலைமையிலான கூட்டணியில் கனடா அங்கம் வகித்துள்ளதால் அவர்கள் மீது பழிவாங்கும் தாக்குதலை நடாத்தும் என கனடிய மக்களை அபு அன்வர் எச்சரித்துள்ளான்.
பயங்கரவாதம் கனடாவில் ஒரு உண்மையான மற்றும் பயங்கரமான அச்சுறுத்தலாக இருந்து வருகின்றது அதனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டுமென கனடாவின் பொது பாதுகாப்பு மற்றும் அவசரநிலை தயாரிப்பு அமைச்சர் Steven Blaney அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.