கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள்

466
கனடா ரொராண்டோ மாநகரில் அல்பெர்ட் கம்பெல் சதுர்க்கத்தில் மே-18 தமிழின நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.

கனடியத் தமிழ் சமூகமும் கனடிய தமிழ் மாணவர் சமூகமும் இணைந்து இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டு ஸ்ரீலங்கா இனவாத அரசினால் திட்டமிட்டு, கொடூரமான முறையில் அழிக்கப்பட்ட மக்களை நினைவு கூரும் முகமாகவும் தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட இன அழிப்பினை சர்வதேசத்திற்கு எடுத்துக் கூறும் வகையிலும் பெருந்திரளான மக்கள் இந்த நினைவு நாள் நிகழ்வில்   கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கனடாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், பல முக்கிய அரசியற் கட்சி உறுப்பினர்களின் உரைகளுடன், இந்தியாவில் இருந்து வருகை தந்த முள்ளிவாய்க்கால் முற்ற நிறுவனர்களில் ஒருவரான திரு. நடராஜன் அவர்களின் எழுச்சி உரையும், மாணவர்களின் எழுச்சி நடனங்கள் மற்றும் எழுச்சிப் பாடல்களும் இடம்பெற்றன.

இறுதியில் மக்கள் இறந்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அகவணக்கம் செலுத்தியதுடன் உறுதி உரையுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றன.

 

SHARE