கனடா-ஸ்காபுரோவில் வாகனமொன்றினால் மோதப்பட்ட 14-வயது பெண்

476

 

கனடா-ஸ்காபுரோவில் வாகனமொன்றினால் மோதப்பட்ட 14-வயது பெண் ஸ்தலத்திலேயே இறந்து விட்டார். இவரை இடித்த வாகன வாகன சாரதி அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.
இச்சம்பவம் விஞ்ச் அவெனியு மற்றும் நெல்சன் வீதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நடந்துள்ளது.
விபத்து நடந்த சமயம் பெண் தனியாக இருந்துள்ளார். சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப்பெண் விபத்து நடந்த பகுதியில் வசித்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் நடந்த இடத்தில் விசாரனை குழு ஒன்று உள்ளதாகவும் விபத்து தொடர்பான ஆதாரங்களை தேடுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பெண்ணை மோதிய வாகனம் அந்த இடத்தில் நிலைத்து நிற்க தவறிவிட்டது.
அப்பகுதியில் இருந்து வீடியோ ஆதாரத்தை பெறும் செயல்பாட்டில் விசாரனையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

 

hit

– See more at: http://www.canadamirror.com/canada/35565.html#sthash.q0QYPAjG.dpuf

SHARE