கனவில் கண்ட சதம்.. இலங்கைக்கு கொடுத்த ஆப்பு: சொல்கிறார் சச்சின்

313
images (1)
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் கனவில் கண்ட சதம் நனவானது பற்றி கூறியுள்ளார்.டெல்லியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற சச்சின், அங்கு நடந்த சில சம்பவங்களை நினைப்படுத்தினார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய சச்சின், டெஸ்ட் அணித்தலைவராக பெரஸ் ஷா கொட்லா மைதானத்தில் முதன் முதலாக களமிறங்கினேன். அப்போது அவுஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் வெற்றி பெற்றோம்.

அதே போல 2005ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சென்னையில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாடியிருந்தோம். டெல்லியில் அடுத்தப் போட்டி நடக்கவிருந்தது.

அன்று மதியம் ஒரு குட்டி தூக்கம் போட்டேன். அப்போது அந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பது போன்று கனவு கண்டேன்.

ஆனால் அதேபோல் இலங்கைக்கு எதிரான அந்த டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துவிட்டேன். அது எனக்கு 35வது சதமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.

SHARE